TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை வகுப்புக் கூட்டத்தின் சிறப்பம்சங்கள் -ஆகஸ்ட் 2023

August 15 , 2023 339 days 206 0
  • ரெப்போ விகிதத்தில் தற்போதைய நிலையை அப்படியே நீட்டிக்க நிதியியல் கொள்கை குழு முடிவெடுத்துள்ள மூன்றாவது கூட்டம் இதுவாகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியியல் கொள்கைக் குழு முக்கிய கொள்கை சார் ரெப்போ விகிதத்தை 6.5% ஆக மாற்றாமல் வைத்துள்ளது.
  • நிதியியல் கொள்கைக் குழுவானது கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தில் இந்த விகிதத்தை 6.25 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக உயர்த்தியது.
  • இது பணக் கையிருப்பு விகிதம் (CRR) மாற்றப் படாமல் 4.5 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டுக் கொடுப்பனவுகளில் செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப் படுத்தத் திட்டமிட்டுள்ளது.
  • நேரடிக் கட்டண வழங்கீட்டில், குறுகியத் தொலைவு வரம்பிலான கம்பி வடச் சேவைகள் (NFC) தொழில்நுட்பம் ஆனது UPI-Lite மூலம் பயன்படுத்தப்படும்.
  • மத்திய வங்கியானது UPI-Lite மூலமான பண வழங்கீட்டிற்கு 200 ரூபாய் ஆக இருந்த வரம்பினை 500 ரூபாயாக உயர்த்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்