TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் சில்லறை எண்ணிம நாணயம்

December 5 , 2022 721 days 503 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) எண்ணிம நாணயத்தின் சில்லறை விற்பனை சோதனையானது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
  • இது இணையவழி ரூபாய் அல்லது எண்ணிம ரூபாய் என விளம்பரப் படுத்தப் படுகிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வங்கி எண்ணிம நாணயம் (CBDC) என்பது இறையாண்மை மிக்க நாணயத்தின் ஒரு மின்னணு வடிவமாகும்.
  • சில்லறை எண்ணிம ரூபாயானது, மத்திய வங்கியின் நேரடிப் பொறுப்பின் கீழ் இருப்பதால், பணம் செலுத்துவதற்கும் கடன் ஈடு செய்வதற்கும் பாதுகாப்பான முறையில் பணத்திற்கான அணுகலை வழங்குகிறது.
  • நாடு முழுவதும் உள்ள நான்கு நகரங்களில் எண்ணிம ரூபாயின் சில்லறை விற்பனையில் பங்கேற்பதற்காக கட்டம் வாரியாக எட்டு வங்கிகள் இதில் அடையாளம் காணப் பட்டுள்ளன.
  • முதற்கட்டமாக, பாரத் ஸ்டேட் வங்கி, ICICI வங்கி, YES வங்கி, IDFC First வங்கி உள்ளிட்ட நான்கு வங்கிகள் இந்தச் சோதனைக் கட்டத்தில் பங்கேற்கின்றன.
  • இந்தச் சோதனையானது, முதலில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் மேற்கொள்ளப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்