இது ரொக்கத் தகவமைப்பு வசதியின் (LAF - liquidity adjustment facility) கீழ் நேர்மாற்று மறுகொள்முதல் விகிதத்தை (Reverse Prepo Rate) 25 புள்ளிகள் என்ற அளவில் குறைக்க முடிவு செய்துள்ளது.
இது நேர்மாற்று மறுகொள்முதல் விகிதத்தை 4%லிருந்து 3.75% ஆகக் குறைத்து உள்ளது.
முன்னதாக மார்ச் மாதத்தில், இது ரெப்போ அல்லது நேர்மாற்று கொள்முதல் விகிதத்தை 5.15%லிருந்து 4.4% ஆகக் குறைத்திருந்தது.
மேலும் நீண்ட கால ரெப்போ நடவடிக்கைக்காக (LTRO - Long Term Repo Operation) ரூ.50,000 கோடி நிதியையும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்த முறை LTRO ஆனது நுண் நிதியியல் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் ரொக்கத் தேவைகளின் மீது கவனம் செலுத்த இருக்கின்றது.
முதலில் LTRO நிதியானது பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு அதிக அளவில் வழங்கப் பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கியானது பணப்புழக்கப் பரவு விகிதத்தை (LCR - Liquidity Coverage Ratio) 100%லிருந்து 80% ஆகக் குறைத்துள்ளது.
LCR என்பது வங்கிகளின் தற்போதைய திறனுடன் குறுகிய காலக் கடன்களைப் பூர்த்தி செய்வதற்காக வங்கிகளிடம் உள்ள சொத்துகளாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியானது இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, நபார்டு மற்றும் தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி என்ற சிறப்பு நிதியுதவியையும் வழங்க இருக்கின்றது.