TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை

June 8 , 2021 1268 days 635 0
  • இந்திய ரிசர்வ்  வங்கியானது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் தனது நாணயக் கொள்கையை வெளியிட்டுள்ளது.
  • இதில் வட்டி விகிதங்கள் எதுவும் மாற்றப்படவில்லை.

முக்கிய தகவல்கள்

  • தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா போன்ற மனிதத் தொடர்புகள் அதிகமுள்ள துறைகளுக்காக 15,000 கோடி ரூபாய் கொண்ட ஒரு ரொக்க வசதியை இக்கொள்கை வழங்கி உள்ளது.
  • மேலும் ரொக்க வசதியை அதிகரிக்கும் வகையில் வளர்ச்சியைப் புதுப்பிப்பதற்காக வேண்டி G-SAP 1.0 திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்தில் 1.2 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிலும் ஜுன் மாத காலாண்டில் 40,000 கோடி ரூபாய் என்ற அளவிலும் காப்புப் பத்திரங்களை வாங்க உள்ளதாகவும் அது அறிவித்துள்ளது.
  • மறுகொள்முதல் விகிதமானது 4 சதவீதமாகவும், நேர் மாற்று மறுகொள்முதல் விகிதமானது 3.35 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • G-SAP 2.0 திட்டமானது 1.2 மில்லியன் மதிப்பிலான பத்திரங்களை வாங்குவதற்காகத் தொடங்கப் பட்டது.
  • இத்திட்டத்தின் கீழ், மாநில அரசுகள் வழங்கும் பத்திரங்களையும் இந்திய ரிசர்வ் வங்கி வாங்க உள்ளது.

குறிப்பு

  • G-SAP 1.0 என்பது இந்திய ரிசர்வ் வங்கியினால் அறிவிக்கப்பட்ட அரசுப் பிணையங்களை கையகப்படுத்தும் ஒரு திட்டமாகும்.
  • இது 2022 ஆம் நிதி ஆண்டில் முறையான வளர்ச்சியைக் கொண்டு வருவதற்காக வேண்டி தொடங்கப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்