1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் 45ZB பிரிவின் படி இந்திய ரிசர்வ் வங்கியானது நாணயக் கொள்கைக் குழுவை (MPC) மறுசீரமைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் விதிகளின்படி, இந்தக் குழுவானது இந்திய ரிசர்வ் வங்கியினைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப் படும் மூன்று உறுப்பினர்கள் என ஆறு உறுப்பினர்களைக் கொண்டது
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்த 3 உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகள் வரையில் இப் பதவியில் இருப்பர்.