இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை புதுப்பிப்பு
February 13 , 2022 1017 days 699 0
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு முக்கிய வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்துள்ளது.
2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு, வெளியிடப்பட்ட அதன் முதல் கொள்கையில் ரிசர்வ் வங்கி அதன் இணக்கமான நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது.
தொடர்ந்து பத்தாவது முறையாக நிதிக் கொள்கைக் குழு தனது நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது.
நிதிக் கொள்கைக் குழு ஆனது ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் ஆகியவற்றை முறையே 4 சதவீதம் மற்றும் 3.35 சதவீதமாக மாற்றாமல் வைத்துள்ளது.
இது அதிக பணவீக்கத்தின் பின்னணியில் 'உள்ளடக்க' நிலைப்பாட்டை (accommodative’ stance) மேற்கொண்டுள்ளது.
2023 ஆம் நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
2022 ஆம் நிதியாண்டில் உள்ள (FY 2022) 9.2 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது, பொருளாதாரத்தைத் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு மேலான நிலைக்குக் கொண்டு செல்லும்.
2022 ஆம் நிதியாண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டுப் பணவீக்கமானது 5.3 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
மின்னணு ரசீதுகளின் வரம்பை ரூ.10,000 ரூபாயிலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த இக்குழு பரிந்துரைத்தது.