இந்திய ரிசர்வ் வங்கியானது PRAVAAH இணைய தளம், retail direct கைபேசி செயலி மற்றும் நிதித் தொழில்நுட்பக் களஞ்சியம் ஆகிய மூன்று முக்கிய முன்னெடுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மூன்று முன்னெடுப்புகளும் முறையே 2023 ஆம் ஆண்டு ஏப்ரல், ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதங்களில் அறிவிக்கப்பட்டன.
PRAVAAH என்பது எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனமும் அங்கீகாரம் பெறுவதற்கு பாதுகாப்பான மற்றும் மையப்படுத்தப்பட்ட இணைய அடிப்படையிலான இணைய தளமாகும்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட retail direct திட்டம் மூலம் சில்லறை முதலீட்டாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கியுடன் நேரடி சில்லறை உயர் பாதுகாப்பு நிதிக் கணக்குகளை உருவாக்க retail direct தளம் உதவும்.
retail direct கைபேசிச் செயலி மூலம், சில்லறை முதலீட்டாளர்கள் தற்போது தங்கள் கைபேசிகளைப் பயன்படுத்தி அரசுப் பத்திரங்களைக் கையாளலாம்.