TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிமுறைகள்

May 1 , 2021 1178 days 596 0
  • பெருநிறுவன வங்கிகளுக்கான ஆட்சிமுறையை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியானது சமீபத்தில் ஒரு சில வழி முறைகளை வகுத்தது.
  • மேலாண்மை இயக்குநர் (MD) மற்றும் தலைமை நிர்வாக அலுவலர் (CEO) போன்ற பொறுப்புகளில் ஒரே நபர் 15 வருடத்திற்கு மேல் பதவி வகிக்கக் கூடாது.
  • இருப்பினும், அவர்கள் 3 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நியமிக்கப்படலாம்.
  • இப்பதவிகளில் MD () CEO ஆகியோர் 12 ஆண்டுகளுக்கு மேல் இந்தப் பதவிகளை  வகிக்கக் கூடாது.
  • இருப்பினும், அசாதாரணமான சூழ்நிலைகளில் அவர்கள் பதவிக் காலம் 15 ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படலாம்.
  • இந்த நாட்டில் கிளையினை அமைத்துள்ள வெளிநாட்டு வங்கிகளுக்கு இந்த வழிமுறைகள் பொருந்தாது.
  • தலைவர் () நிர்வாகம் சாரா இயக்குநர் பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 75 வயதாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • நிர்வாகம் சாரா இயக்குநர் பதவிக்கு (Non-executive Directors) ரூ.20 லட்சத்திற்கும் மேல்  ஊதியம் வழங்கப்படக் கூடாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்