TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை 2019-20

September 1 , 2020 1549 days 751 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI - Reserve Bank of India) தனது வருடாந்திர அறிக்கை 2019-20 என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2019-20 ஆம் ஆண்டில் மொத்த வருவாயானது 28.97% என்ற அளவில் அதிகரித்துள்ளது.

முக்கியத் தரவுகள்

  • RBIயின் இருப்பு நிலையானது 13.42% என்ற அளவில் அதிகரித்துள்ளது.
  • 2018-19 ஆம் ஆண்டில் அதன் மொத்த வருவாயானது ரூ.1,49,672 ஆக இருந்தது.
  • இது 2019-20 ஆம் ஆண்டில் 1,93,036 ஆக உள்ளது.
  • அதன் செலவினமானது 39.72% என்ற அளவில் குறைந்துள்ளது.
  • வங்கியின் வட்டி வருவாயானது 44.62% ஆக அதிகரித்துள்ளது.
  • அரசுப் பங்குகளில் RBIயின் இருப்பு நிலையானது 57.19% ஆக அதிகரித்துள்ளது.
  • வங்கி மோசடி வழக்குகளின் மதிப்பானது 74% ஆக அதிகரித்துள்ளது.
  • வங்கி மோசடி வழக்குகளின் எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் 6800 ஆக அதிகரித்துள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் 5900 ஆக இருந்தது.
  • வங்கி அமைப்பின் நிகர வாராக் கடன் விகிதமானது 9.1% ஆகக் குறைந்துள்ளது. இது 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 11.2% ஆக இருந்தது.
  • தற்போது புழக்கத்தில் உள்ள பணமானது 17% ஆக அதிகரித்துள்ளது.
  • இது 2019-20 ஆம் ஆண்டில் ரூ. 21.10 டிரில்லியன் ஆக இருந்தது.
  • 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரை, RBI ஆனது 618.16 மெட்ரிக் கடன் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் 566,23 டன்களாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்