TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை 2022-23

June 4 , 2023 411 days 269 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது 2022-23 ஆம் ஆண்டிற்கான தனது ஆண்டறிக்கையை (வருடாந்திர ரீதியிலான அறிக்கை) சமீபத்தில் வெளியிட்டது.
  • ஒரு நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் மற்றும் பொருளாதார நிலை குறித்தத் தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது.
  • 2022-23 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் மொத்த வருமானம் 2.35 லட்சம் கோடி ரூபாயாகும்.
  • இது 2021-22 ஆம் ஆண்டிற்கான வருமானமான 1.6 லட்சம் கோடியை விட 47% அதிகம் ஆகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது 87,416.2 கோடி ரூபாய் ஈவுத் தொகையினை மத்திய அரசின் கணக்கிற்கு மாற்ற உள்ளது.
  • இது 2021-22 ஆம் ஆண்டில் பரிமாற்றம் செய்யப் பட்டத் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
  • 2018-19 ஆம் ஆண்டில் 15.5 சதவீதமாக இருந்த மொத்தக் கடன்களில் மொத்த வாராக் கடன்களின் பங்கானது 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் முடிவடைந்த காலாண்டில் 5.8% ஆகக் குறைந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில், 30,252 கோடி மதிப்பிலான 13,530 வங்கி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கைகள் முறையே 9,097 ஆகவும், தொகை 59,819 கோடி ரூபாயாகவும் இருந்தது.
  • மொத்த அன்னிய நேரடி முதலீடு (FDI) ஆனது 2022-23 ஆம் ஆண்டில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 46 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
  • இது முந்தைய நிதியாண்டை விட 26% குறைவாகும்.
  • 2022-23 ஆம் ஆண்டில், மொத்தப் பணவீக்கம் சராசரியாக 6.7% ஆகும்.
  • மதிப்பின் அடிப்படையில், 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களின் பங்கானது, பணப் புழக்கத்தில் உள்ள ரூபாய்த் தாள்களின் மொத்த மதிப்பில் 87.9% ஆகும்.
  • புழக்கத்தில் உள்ள இணைய வழி ரூபாய்-மொத்த விற்பனை மற்றும் இணையவழி ரூபாய்-சில்லறை விற்பனையின் மதிப்பு முறையே 10.69 கோடி மற்றும் 5.70 கோடி ரூபாயாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்