இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கடந்த ஆண்டு முதல் தேசியப் பண மதிப்புகளில் (ரூபாய்-ரூபிள்) தங்கள் கொடுப்பனவுகளை இரட்டிப்பாக்கியுள்ளன.
ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ரூபாய் மதிப்பில் பெரு நிறுவனங்களின் வைப்புத் தொகை ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் ஆனது ஏற்கனவே சுமார் 65 பில்லியன் டாலராக இருந்தது என்ற நிலையில் இதில் சுமார் 60 பில்லியன் டாலர்கள் மதிப்பானது இந்தியாவிற்கு மேற்கொள்ளப் பட்ட, முக்கியமாக எரிசக்தியில் மேற்கொள்ளப்பட்ட ரஷ்ய ஏற்றுமதியாகும்.