இந்திய ரூபாய் மதிப்பில் சர்வதேச வர்த்தகம் மேற்கொள்வதற்கான வழிமுறை
July 17 , 2022
862 days
425
- இந்திய ரிசர்வ் வங்கியானது "ரூபாய் மதிப்பில் சர்வதேச வர்த்தகத்தை" மேற் கொள்வதற்கான புதிய வழிமுறைகளை அறிவித்தது.
- இந்த நடவடிக்கையானது உலகளாவிய வர்த்தகத்தை ஊக்குவிப்பதோடு, இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
- இதன் கீழ், விலைப்பட்டியல், பணம் செலுத்துதல், அத்துடன் ஏற்றுமதி அல்லது இறக்குமதிக்கான வழங்கீடுகள் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
- எனவே, இதன் மூலம் அனைத்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளையும் ரூபாய் மதிப்பில் குறிப்பிடலாம் மற்றும் விலைப் பட்டியல் தயாரிக்கலாம்.
- இருப்பினும், ரூபாய் மதிப்பில் பணம் செலுத்துவதற்கு, வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணித் துறையின் முன் அனுமதியைப் பெற வேண்டும்.
Post Views:
425