வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளானது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரூபாய் மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனையினைத் தொடங்கியது.
இந்த நடவடிக்கையானது அமெரிக்க நாட்டின் டாலரை சார்ந்திருப்பதைக் குறைத்துப் பிராந்திய பண மதிப்பு மற்றும் வர்த்தகத்தினை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
வங்காளதேசமானது அமெரிக்க நாட்டின் டாலரோடுச் சேர்த்து, மற்றொரு வெளிநாட்டு நாணயத்துடன் இருதரப்பு வர்த்தகம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
வங்காளதேசத்தின் டாக்காவிலிருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி மதிப்பானது 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்தியாவில் இருந்து வங்காளதேசத்திற்கு மேற்கொள்ளப்படும் இறக்குமதியின் மதிப்பு 13.69 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
முன்னதாக இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய ஒப்புக் கொண்டன.
2021-22 ஆம் ஆண்டில் இந்தியா-மலேசியா நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பானது 19.4 பில்லியன் டாலர்களைத் தொட்டது.