TNPSC Thervupettagam

இந்திய வன அறிக்கை – 2021

January 15 , 2022 919 days 1332 0
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், பூபேந்தர் யாதவ், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ‘இந்திய வன அறிக்கையின் (2021)' 17வது பதிப்பினை வெளியிட்டார்.
  • இது நாட்டின் வன வளங்களை மதிப்பிடுவதற்காக 1987 ஆம் ஆண்டு  முதல் இந்திய வன ஆய்வு அமைப்பினால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டு மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில், ​​2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் வனங்கள் மற்றும் மரங்களின் பரவலானது 2,261 சதுர கிலோமீட்டர்கள் அதிகரித்து உள்ளது.
  • வனப் பரவலில் 1,540 சதுர கிலோ மீட்டர் உயர்வும் மரங்களின் பரவலில் 721 சதுர கிலோ மீட்டர் உயர்வும்  இதில் உள்ளடங்கும்.
  • நாட்டின் மொத்த வனங்கள் மற்றும் மரங்களின் பரவலானது தற்போது 80.9 மில்லியன் ஹெக்டேர் ஆக அல்லது நாட்டின் புவியியல் பரப்பில் 24.62% ஆக உள்ளது.
  • 17 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களின் புவியியல் பரப்பில் 33 சதவீதத்திற்கு மேலான பகுதிகள் வனப்பகுதிகளாக உள்ளன.
  • இவற்றுள் லட்சத்தீவு, மிசோரம், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகியவை 75 சதவீதத்திற்கும் அதிகமான வனப் பரவலைக் கொண்டுள்ளன.
  • வனப்பரவல் அதிகரிப்பில் முன்னணியில் உள்ள முதல் ஐந்து மாநிலங்கள் ஆந்திரப் பிரதேசம் (647 சதுர கி.மீ.), தெலுங்கானா (632 சதுர கி.மீ.), ஒடிசா (537 சதுர கி.மீ.), கர்நாடகா (155 சதுர கி.மீ.) மற்றும் ஜார்க்கண்ட் (110 சதுர கி.மீ.) ஆகியன ஆகும்.
  • பரப்பளவு வாரியாக, மத்தியப் பிரதேசம் ஆனது நாட்டிலேயே அதிக வனப்பரவலைக் கொண்டுள்ளது.
  • அதனைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை உள்ளன.
  • மொத்த புவிப் பரப்பளவில் வனப்பரவல் சதவீதத்தின் அடிப்படையில் முன்னணியில் உள்ள முதல் ஐந்து மாநிலங்கள் மிசோரம் (84.53%), அருணாச்சலப் பிரதேசம் (79.33%), மேகாலயா (76.00%), மணிப்பூர் (74.34%) மற்றும் நாகாலாந்து (73.90%) ஆகியவை ஆகும்.
  • நாட்டில் உள்ள சதுப்பு நிலப் பரப்பில் 17 சதுர கிலோமீட்டர் அதிகரித்துள்ளது.
  • சதுப்பு நிலப் பரப்பின் அதிகரிப்பு அடிப்படையில் முன்னணியில் உள்ள  முதல் மூன்று மாநிலங்கள் முறையே ஒடிசா (8 சதுர கி.மீ.), மகாராஷ்டிரா (4 சதுர கி.மீ.) மற்றும் கர்நாடகா (3 சதுர கி.மீ.) ஆகியவை ஆகும்.
  • நாட்டிலுள்ள பெரும் நகரங்களில், வனப்பரவல் அடிப்படையில் அகமதாபாத்  நகரம் ஒரு மிகப்பெரிய இழப்பைச் சந்தித்துள்ளது.
  • வடகிழக்கு மாநிலங்களானது 1,020 சதுர கி.மீ. அளவிலான இழப்பைச் சந்தித்துள்ளது.
  • இது ஒட்டு மொத்தமாக இந்தியாவின் மொத்த வனப்பரவலில்  23.75 சதவீதத்தை உள்ளடக்கியதோடு இந்தியாவின் மிகப்பெரிய பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளுக்கு உட்பட்டவையாகவும் உள்ளது.
  • அருணாச்சலப் பிரதேசம் அதிகபட்சமாக 257 சதுர கி.மீ இழப்பினையும், அதனைத் தொடர்ந்து மணிப்பூர் 249 சதுர கி.மீ இழப்பினையும், நாகாலாந்து 235 சதுர கி.மீ இழப்பினையும், மிசோரம் 186 சதுர கி.மீ இழப்பினையும் மேகாலயா 73 சதுர கி.மீ. இழப்பினையும் கண்டுள்ளன.
  • நாட்டில் மொத்தமுள்ள 140 மலைப்பாங்கான மாவட்டங்களில், கடந்த இரண்டு ஆண்டுகளில் காடுகளின் பரப்பளவு 902 சதுர கிலோ மீட்டர் அளவு குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்