TNPSC Thervupettagam

இந்திய வனங்களின் நிலை குறித்த அறிக்கை (ISFR)

October 1 , 2024 55 days 144 0
  • 2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட வேண்டிய இந்திய வனங்களின் நிலை குறித்த அறிக்கை (ISFR), ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதமாகியும் இன்னும் வெளியிடப் பட வில்லை
  • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்த அறிக்கையானது இந்திய வனக் கணக்கெடுப்பு (FSI) அமைப்பினால் தயாரிக்கப்படுகிறது.
  • 1991 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகின்ற இந்த அறிக்கையானது இந்திய வனங்களின் நிலை பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
  • தாமதமாகியுள்ள  இந்த அறிக்கையானது, அரசாங்கம் அறிக்கை வெளியிடும் காலக் கெடுவைத் தவற விட்ட இரண்டாவது சூழலைக் குறிக்கிறது என்பதோடு, கடைசியாக இதே போன்று 2007 ஆம் ஆண்டில் காலக்கெடு தவறியது.
  • 2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இதற்கு முந்தைய அறிக்கையில், நாட்டின் மொத்த வனங்களின் பரப்பளவு 713,789 சதுர கிலோமீட்டர் அல்லது 21.71 சதவீதமாக உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டு ISFR அறிக்கையில் குறிப்பிடப்பட்டத் தரவினை ஒப்பிடும்போது இது 1,540 சதுர கிலோமீட்டர்கள் அதிகமாகும்.
  • 2013 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில், 95 சதவீதக் காடழிப்பு ஆனது இயற்கையான காடுகளில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் (MoEFCC) படி, மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா 173,396 ஹெக்டேர் (1,733 சதுர கிலோமீட்டர்) காடுகளை அழித்துள்ளது.
  • 2013 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 21,761 சதுர கிலோமீட்டர் பரப்பிலான காடு இழப்பினை ஈடு செய்யும் வகையிலான காடு வளர்ப்பு முறையினை மீட்டெடுத்துள்ளதாகவும் அறிக்கை கூறியுள்ளது.
  • ஒடிசாவில், 1999 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் வகைப்படுத்தப்படாத காடுகள் 17 சதுர கிலோமீட்டரிலிருந்து 16,282 சதுர கிலோமீட்டராக அதிகரித்தன.
  • ஆனால் 2017 ஆம் ஆண்டு அறிக்கையில் இது 22 சதுர கிலோமீட்டராகக் குறைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்