நாக்பூரில் உள்ள பாலா சாஹேப் தாக்கரே கோரேவாடா சர்வதேச விலங்கியல் பூங்காவில், பொதுவாக ‘பறவைக் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும் அதிகத் தொற்று மிக்க பறவைக் காய்ச்சல் (HPAI) H5N1 வைரஸால் பாதிக்கப்பட்டு மூன்று புலிகளும் ஒரு சிறுத்தைப்புலியும் உயிரிழந்துள்ளன.
(HPAI) H5N1 வைரஸ் ஆனது மிகப் பொதுவாக ‘பறவைக் காய்ச்சல்’ என்று அழைக்கப் படுகிறது.
இந்தியாவில் காப்பகங்களில் வைத்து நன்கு காக்கப்படும் வனவிலங்குகளிடையே மிகப்பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய முதல் நோய்ப் பாதிப்பு இதுவாகும்.
ஐந்து கண்டங்களில் உள்ள 108 நாடுகளில் இந்த வைரஸ் நிலையாக பரவிக் காணப் படுகிறது.