TNPSC Thervupettagam

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்ஆப்ரிக்கத் தம்பதியினருக்கு அமெரிக்காவின் உயரிய விருது

October 28 , 2017 2632 days 891 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கத் தம்பதியினரான பேராசிரியர் குரேஷா அப்துல் கரிம் மற்றும் பேராசிரியர். சலீம் அப்துல் கரிம் ஆகியோர், ஹெச்ஐவி / எய்ட்ஸ் நோய் பிரிவில் ஆற்றிய அளப்பரிய சேவைக்காக, அமெரிக்காவின் மனித வைராலஜி நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றனர்.
  • இருவரும் தொற்றுநோய் சிறப்பியல் வல்லுனர்கள். இவர்கள் அமெரிக்காவின் பால்டிமோரில் அமைந்துள்ள மனித வைராலஜி நிறுவனத்தின் (Institute of Human Virology – IHV) 19-வது வருடாந்திர சர்வதேச மருத்துவ வைரஸ் ஆராய்ச்சிக் கருத்தரங்கில் கவுரவிக்கப்பட்டனர்.
  • இந்த மரியாதைக்குரிய விருதினை, HIV வைரஸ்தான் எய்ட்சு நோய்க்கு காரணம் என்பதைக் கண்டறிந்த அறிஞர் ராபர்ட் காலோ அவர்கள், பேராசிரிய தம்பதிகளுக்கு வழங்கினார்.
  • பாலியல் ரீதியான எச்ஜவி தொற்றிலிருந்து ஆன்டிரெட்ரோவைரல் (HIV எதிர்மருந்து) மருந்துகள்தான் காக்கின்றன என்பதை 2010-ல் முதன்முதலாக கண்டறிந்து விளக்கினர். இவர்களது ஆய்வின் முடிவுகளை CAPRISA 004 Tenofovir Gel என்ற சோதனையில் நிரூபித்தனர்.
  • இந்த ஜெல் மருந்து HIV சிகிச்சையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த கண்டுபிடிப்பானது 2010-இன் முதல் 10 உலகளாவிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றது. மேலும், இந்த மருந்து பிறப்புறுப்புகளில் ஏற்படும் தோல் அழற்சி தொற்றிலிருந்தும் (Genital Herpes) காப்பதாக பேராசிரியர் தம்பதிகள் நிரூபித்தனர். இதுவே எய்ட்ஸ் நோய்க்கு எதிரான முதல் பயனுள்ள மருந்து ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்