ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான இந்திய வாகை மரம் ஆனது சமீபத்தில் ஏற்பட்ட கோதாவரி வெள்ளத்தின் போது முறிந்து விழுந்தது.
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஆந்திரப் பிரதேசத்தில் கோதாவரி நதிக்கரையில் அமைந்த இந்த மரமானது அதிகப் புகைப்படம் எடுக்கப்பட்ட மரம் என்று குறிப்பிடப் பட்டது.
அல்பிசியா லெபெக் என்றும் அழைக்கப்படும் இந்திய வாகை மரம் ஆனது, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வெப்ப மண்டல மரமாகும்.
இது ஃபாபாசியே குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் இலையுதிர் மரமாகும்.