இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150வது ஆண்டு நிறைவு
January 5 , 2025 17 days 151 0
1875 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட இந்திய வானிலை ஆய்வுத் துறையானது தனது 150 ஆண்டு காலத்திய சேவை நிறைவு விழாவினைக் கொண்டாட உள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தில் வானிலை பற்றிய ஒரு முறையான கண்காணிப்பு, மிகவும் வழக்கமான அறிக்கையிடல் மற்றும் அறிவியல்துறை சார் முன்னறிவிப்பு ஆகியவற்றிற்காக வேண்டி உருவாக்கப்பட்ட ஆரம்ப கால அரசு துறைகளில் இதுவும் ஒன்றாகும்.
1793 ஆம் ஆண்டில் (அப்போதைய) மதராசில் முதலாவது வானிலை மற்றும் வானியல் ஆய்வகம் நிறுவப்பட்டது.
பின்னர் 1875 ஆம் ஆண்டில் H.F.பிளான்ஃபோர்ட் அவர்களை வானிலை அறிக்கையாளர் எனக் கொண்டு இந்திய வானிலை ஆய்வுத் துறையானது நிறுவப்பட்டது.