இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஆனது சோதனை அடிப்படையிலான வெப்பக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
மனிதர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்காக மக்கள் எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் தொடர்பான ஒரு வழிகாட்டுதலை இந்த வெப்பக் குறியீடு வழங்குகிறது.
ஒரு சோதனை அடிப்படையிலான இந்த வெப்பக் குறியீட்டிற்குப் பின்வரும் வண்ணக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
பச்சை: 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான சோதனை அடிப்படையிலான வெப்பக் குறியீடு
மஞ்சள்: 36-45 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குட்பட்ட சோதனை அடிப்படையிலான வெப்பக் குறியீடு
ஆரஞ்சு: 46-55 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குட்பட்ட சோதனை அடிப்படையிலான வெப்பக் குறியீடு
சிவப்பு: 55 டிகிரி செல்சியஸுக்கு மேலான சோதனை அடிப்படையிலான வெப்பக் குறியீடு.