TNPSC Thervupettagam

இந்திய வானிலை மையத்தின் நிறுவன தினம் - ஜனவரி 15

January 16 , 2020 1778 days 564 0
  • மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள IMD (Indian Meteorological Department - இந்திய வானிலை மையம்) ஆனது தனது 145வது நிறுவன தினத்தை அனுசரித்தது.
  • இது வானிலை முன்னறிவிப்புகள், வானிலை சார்ந்த கண்காணிப்புகள் மற்றும் நில அதிர்வு சார்ந்த கண்காணிப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் தலைமை நிறுவனமாகும்.
  • IMDயின் தலைமையகமானது புது தில்லியில் அமைந்துள்ளது.
  • இது இந்தியாவிலும் அண்டார்டிகாவிலும் கண்காணிப்பு நிலையத்தை அமைத்து, அதனை செயல்படுத்தி வருகின்றது.
  • முக்கியமான IMD மையங்கள் குவஹாத்தி, கொல்கத்தா, சென்னை, மும்பை, புது தில்லி மற்றும் நாக்பூரில் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.
  • உலக வானிலை அமைப்பின் (World Meteorological Organization - WMO) ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்களில் IMD மையமும் ஒன்றாகும்.
  • IMDயின் சுமார் 5 ஆய்வகங்கள் உலக வானிலை அமைப்பிடமிருந்து சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
  • இதில் சென்னை, மும்பை, புனே, திருவனந்தபுரம் மற்றும் பன்ஜிம் ஆகிய நகரங்களில் உள்ள வானிலை மையங்களும் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்