TNPSC Thervupettagam

இந்திய விமானநிலைய ஆணையம் - அஸ்ஸாம்

March 29 , 2018 2483 days 1350 0
  • கம்ருப் மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள  மனித குடியேற்றங்களின் நீடித்த வளர்ச்சிக்காக அஸ்ஸாம் மாநில அரசுடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய விமான நிலைய ஆணையம் (Airport Authority of India -AAI) கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இந்திய விமான நிலைய ஆணையமானது தன்னுடைய பெருநிறுவன சமூகப் பொறுப்புடைமை தொடக்கத்தின் (Corporate Social Responsibilities - CSR) கீழ்58 கோடி ரூபாய் நிதியுதவியை கம்ருப் மாவட்டத்திற்கு வழங்கும்.
  • நிதியியல் உதவிக்கான மதிப்பீடுகள் கவுகாத்தி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள சமுதாயங்களின் நெகிழ்திறனை அதிகரிப்பதற்காக ஐ.நா. வளர்ச்சி திட்டத்தால் (United Nations Development Programme - UNDP) தயார் செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய விமான நிலைய ஆணையமானது மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டப் பூர்வ அமைப்பாகும். 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஆணையத்தின் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்