இந்திய விமானப் படை (IAF) இஸ்ரேலின் இராணுவப் பயிற்சியில் முதல் முறையாக பங்கேற்கிறது
November 10 , 2017 2570 days 833 0
முதன் முறையாக 45 பேர் கொண்ட இந்திய விமானப்படைக் குழுவானது இஸ்ரேலின் உவ்டா விமானப் படைத் தளத்தில் இஸ்ரேல் மற்றும் 8 பிற நாடுகளுடன் இணைந்து இரண்டு வாரகால நீலக்கொடி (Blue Flag) இராணுவப் பயிற்சியில் பங்கேற்கிறது.
இது இஸ்ரேலிய வரலாற்றில் மிகப்பெரிய கூட்டுப்போர் பயிற்சியாக அமைய உள்ளது.
ஆண்டிற்கு இருமுறை நடக்கும் இந்நீலக் கொடி பயிற்சியானது சர்வதேச அளவில் இஸ்ரேலின் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த வடிவமைக்கப்பட்டதாகும். இந்தப் பயிற்சியில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கிரீஸ் மற்றும் போலந்து போன்ற நாடுகளுடன் இந்தியா இணைந்து பங்கேற்பது இதுவே முதன் முறையாகும்.
இந்தப் பயிற்சியானது பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலும் உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதிலும் இணைந்து செயலாற்றும் தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
கேப்டன் மாலுக் சிங் வி.எஸ்.எம் (Maluk Singh VSM) தலைமையிலான இந்தியப் பிரிவு இஸ்ரேல் விமானப் படையின் வான்வழி மீட்பு மற்றும் வெளியேற்றுப்பிரிவுடன் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது.