TNPSC Thervupettagam

இந்திய விமானப் படை - பிரமோஸ்

November 23 , 2017 2586 days 1094 0
    • உலகின் மீயொலி வேக (Supersonic) மற்றும் சீர்வேக (Cruise) ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணை இந்திய விமானப் படையின் சுகோய் – 30 MKI போர் விமானம் மூலம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    • இது இந்தியாவிற்கு மிகப்பெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும். ஏனெனில் இப்பரிசோதனையின் போது முதன் முறையாக வங்கக்கடலில் அமைக்கப்பட்ட கடல் சார் இலக்கை தகர்க்க போர் விமானங்களின் மூலம் ஏவுகணை செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
    • 8 மாக் மீயொலி வேகமுடைய பிரமோஸ் ஏவுகணையை வான்வெளியிலிருந்து ஏவி வெற்றிகரமாக சோதனை செய்த உலகின் முதல் விமானப்படை இந்திய விமானப்படையாகும்.
    • இந்த வெற்றிகரமான சோதனையின் மூலம் பிரமோஸ் ஏவுகணை இந்திய விமானப்படையில் இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முப்படைகளிலும் (Triad) பிரமோஸ் ஏவுகணையை இணைக்கும் திட்டம் நிறைவேறியுள்ளது.
    • ஏற்கனவே பிரமோஸ் ஏவுகணை இந்திய தரைப்படை மற்றும் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
    பிரமோஸ்
    • பிரமோஸ் ஏவுகணையாது ஓர் அதிவேக, சீர்வேக ஏவுகணையாகும். இவை நிலம், நீர், வான்வெளி என அனைத்து தளங்களிலிருந்தும் (multi platform) ஏவத்தக்கது.
    • இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO – Defence Research Development Organisation) மற்றும் ரஷ்யாவின் NPOM எனும் நிறுவனத்திற்கு இடையேயான கூட்டிணைவால் உருவாக்கப்பட்டது.
    • பிரம்மபுத்திரா மற்றும் மாஸ்க்வா (Moskva) எனும் இரு நதிகளின் பெயர் கலப்பே இந்த ஏவுகணைக்கு சூட்டப்பட்டுள்ளது.
    • சீர்வேக ஏவுகணைகளானது எதிரிகளின் ரேடார் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு சாதன அமைப்புகளிலிருந்து தப்பிக்க எப்போதும் பூமியை ஒட்டியவாறே குறைந்த உயரத்தில் பறக்கும்.
    • மேலும் பிரமோஸ் ஏவுகணையானது தற்போது செயல்பாட்டிலுள்ள உலகின் அதிவேகமான கப்பல் எதிர்ப்பு சீர்வேக ஏவுகணையாகும்.
    • அண்மையில் விரிவாக்கப்பட்ட வரம்புடைய பிரமோஸ் ஏவுகணை (Brahmos Entended Range Missle) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
    • பிரமோஸ் ER ஏவுகணையானது பிரமோஸின் நடப்பு தூர வரம்பான 290 கி.மீ-ஐ (450 Km ,அதிகபட்சம் 600 km) தாண்டியும் 2.8 மாக்  வேகத்தில் தாக்க வல்லது.
    • இது இருகட்ட எரிபொருள் எஞ்சின் நிலைகளை (two stage) உடையது. இதன் பயணத்தில் முதல் கட்ட எரிபொருள் நிலையில் திட எரிபொருள் உந்து எஞ்சினும் (Solid propellent Booster Engine), இரண்டாவது நிலையில் திரவ ராம்ஜெட் எஞ்சினும் (Liquid Ramjet Engine) செயல்படும்.
    • இது தான் உலகின் முதல் மீயொலி சீர்வேக ஏவுகணையாகும்.
    • இவை 200 முதல் 300 கிலோ வரை எடையுள்ள மரபுசார்ந்த போர் ஆயுதங்களை தாங்கி செல்லவல்லது.
    • இந்த ஏவுகணையானது “Fire and Forget” கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகின்றது. அதிக அளவிலான இயக்க ஆற்றலை (Kinetic Energy) வெளிப்படுத்துவதால் இந்த ஏவுகணை பெரும் அழிப்பு நாச சக்தியை கொண்டவை.
    • இந்தியா MTCR-ல் (Missle Technology Control Regime) முழு உறுப்பினரானதைத் தொடர்ந்து இந்த ஏவுகணைக்கான தொழிற்நுட்ப மேம்பாட்டை (upgradation) மேற்கொண்டுள்ளது.
    • MTCRல் முழு உறுப்பினரானதால் இந்தியாவிற்கு பிரமோஸ் சீர்வேக ஏவுகணையில் வரம்பில் (range) இடப்பட்ட கட்டுப்பாடு (limit) நீக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்