TNPSC Thervupettagam

இந்திய விமானப்படை தினம் - அக்டோபர் 08

October 11 , 2023 413 days 262 0
  • 1932 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை (IAF) நிறுவப்பட்டதன் நினைவாக இந்த வருடாந்திர நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'இந்திய விமானப் படை- எல்லைகளுக்கு அப்பாற்பட்ட விமானப் படை ஆற்றல்' என்பதாகும்.
  • இந்திய விமானப்படை ஆனது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 08 ஆம் தேதியன்று நிறுவப் பட்ட ராயல் இந்திய விமானப் படையிலிருந்து உருவானது.
  • 1950 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய விமானப் படையானது இன்றும் செயல் பாட்டில் உள்ளது.
  • 1947-1948, 1965, 1971 (வங்காளதேசப் போர்) மற்றும் 1999 (கார்கில் போர்) ஆகிய ஆண்டுகளில் இந்திய விமானப் படை பாகிஸ்தானுடன் நான்கு மோதல்களை மேற் கொண்டது.
  • இது 1961 ஆம் ஆண்டில், கோவாவினை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கையில் உதவியாக இருந்தது.
  • 1962 ஆம் ஆண்டில், சீன இராணுவத்திற்கு எதிரான போரில் இந்திய ஆயுதப் படைகளுக்கு இந்திய விமானப் படை முக்கியமான விமான சேவைகளை வழங்கியது.
  • 1984 ஆம் ஆண்டில், சியாச்சின் பகுதியினைக் கைப்பற்ற இந்திய விமானப் படை உதவியது.
  • 1988 ஆம் ஆண்டில், தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மாலத்தீவு அரசாங்க ஆட்சிக் கவிழ்ப்பினை இந்திய விமானப் படை தடுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்