TNPSC Thervupettagam

இந்திய விமானப்படையின் “மெட் வாட்ச்”(Med Watch)

October 13 , 2017 2471 days 776 0
  • 85வது இந்திய விமானப்படை தினத்தன்று, இந்திய விமானப்படை “மெட் வாட்ச்” எனும் உடல்நலத்திற்கான முதல் கைபேசி செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • மெட் வாட்ச் – மூன்று ஆயுதப் படைப்பிரிவினருக்குமான உடல்நலத்திற்கான முதல் கைபேசி  செயலி ஆகும்.
  • இந்திய விமானப்படை ஊழியர்களுக்கு நம்பத்தகுந்த சுகாதாரத் தகவல்களை வழங்கும் பல அம்சங்களை இந்த செயலி கொண்டுள்ளது.
  • இந்த செயலியானது, விமானப்படை வீரர்கள் சரியான நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்கு நோய் தடுப்புத் திறனூட்டலை மேற்கொள்ள ஓர் நினைவூட்டியாகவும், “இந்திர தனுஷ் திட்டத்தை” செயல்படுத்தவும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்