இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனமானது (ZSI - Zoological Survey of India) சமீபத்தில் “உயிரின வாழ்வியல் மண்டலங்களில் விலங்குகளின் பன்முகத்தன்மை : இந்திய தீவுகள்” என்ற அறிக்கையை வெளியிட்டது.
இது முதன்முறையாக அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் அனைத்து விலங்கின வகை உயிரினங்களையும் உள்ளடக்கிய தரவு தளத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய புவியியல் பகுதிகளில் 0.25 சதவிகிதத்தை மட்டுமே கொண்ட தீவுகள், நாட்டின் ஒட்டுமொத்த விலங்கின உயிர் வகைகளில் 10 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டுள்ளது என இவ்வறிக்கை நிரூபித்துள்ளது
ஒட்டுமொத்தமாக தீவுகளில் காணப்படும் 10 கடல் விலங்கினங்களில் கீழ்க்காணும் 2 உயிரினங்கள் IUCN-வின் (International Union for Conservation of Nature) அச்சுறு நிலையில் உள்ள உயிரிகளுக்கான சிவப்பு அட்டவணையில் மறையத்தகு (Vulnerable) நிலையில் உள்ள உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவையாவன
அவில்லியா/கடல்பசு மற்றும்
இந்தோ-பசிபிக் ஹம்பேக் டால்பின்
ஒட்டுமொத்தமாக 46 நிலவாழ் பாலூட்டிகள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. அவை IUCN-இன் பட்டியலின்படி கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கீழ்க்காணும் 3 இனங்கள் உயர் அச்சுறு நிலையில் உள்ளனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன
அந்தமான் மூஞ்சூறு (குரோசிடூரா அந்தமானென்சிஸ்)
ஜென்கின்னின் மூஞ்சூறு (குரோசிடூரா ஜென்சின்ஸி
நிக்கோபார் மூஞ்சூறு (குரோசிடூரா நிகோபாரிகா)
5 உயிரினங்கள் அழிவு நிலையில் (Endangered) உள்ளனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
9 உயிரினங்கள் மறையத்தகு நிலையில் (Vulnerable) உள்ளனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
1 உயிரினம் அண்மை அச்சுறு நிலையில் (Near Threatened) உள்ளனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தீவுகளின் சுற்றுச்சூழலியலின் மற்றொரு தனித்துவமான அம்சம் 555 கற்கோரை பவளப்பாறைகள் (scleractinian corals) அங்கு காணப்படுவதாகும்.