இந்திய விலங்குகள் நல வாரிய (Animal Welfare Board of India - AWBI) தலைமையகத்தை சென்னையிலிருந்து ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தின் பல்லாம்கருக்கு (Ballabhgarh) இந்திய அரசு மாற்றியுள்ளது.
விலங்குகள் நல்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் AWBI-க்கு இடையே சிறந்த ஒருங்கிணைவை ஏற்படுத்துவதற்காகவும் AWBI உடனான கலந்தாலோசனைக்குப் பிறகு தற்போது இந்திய விலங்குகள் நல வாரியத்தின் தலைமையகம் மாற்றப்பட்டுள்ளது.
விலங்குகள் நல வாரியமானது 1960 ஆம் ஆண்டின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் (Prevention of Animal Cruelty Act 1960) பிரிவு 4ன் கீழ் 1962ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஓர் ஆலோசனை வழங்குகின்ற சட்டப்பூர்வ அமைப்பாகும்.
இந்த வாரியத்தில் 28 உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். தற்போது இதன் தலைவராகP.குப்தா உள்ளார்.
தொடக்கத்தில் இந்த ஆணையமானது மத்திய உணவு மற்றும் வேளாண் (Ministry of Food and Agriculture) அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.
1990-ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புப் பிரிவானது (Subject of Prevention of Cruelty to Animals) மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது.