இந்திய வில்வித்தை மன்றத்தின் தலைவராக பி.வி.பி. ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இத்தேர்தலானது முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரான எஸ்.ஒய். குரேஷி மேற்பார்வையில் நடைபெற்றது.
இந்திய வில்வித்தை மன்றத்தின் செயலாளராக மகாசிங் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த மன்றத்தின் பொருளாளராக டி.கே. வித்யார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த மன்றத்தின் மூத்த துணைத் தலைவராக சுனில் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ராஜேந்திர சிங் தோமர் மற்றும் பூர்ணிமா மகதோ ஆகியோர் இந்த மன்றத்தின் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.