TNPSC Thervupettagam

இந்திய வெட்டுக் கிளிகள் – சிவப்புப் பட்டியல்

December 21 , 2020 1440 days 672 0
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for the Conservation of Nature - IUCN) வெட்டுக்கிளி நிபுணர் குழுவானது முதன்முறையாக இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் மீதான ஒரு சிவப்புப் பட்டியல் ஆய்வைத் தொடங்கியுள்ளது.
  • இதுவரை, எந்தவொரு இந்திய வெட்டுக்கிளி இனமும் சிவப்புத் தரவுப் பட்டியலில் இடம் பெறவில்லை.
  • இந்த ஆய்வானது தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகியவற்றின் எல்லையில் அமைந்த நீலகிரி பல்லுயிர்ப் பெருக்கக் காப்பகத்தில் (Nilgiris Biosphere Reserve - NBR) தொடங்கப்பட உள்ளது.
  • இந்த ஆய்வானது டெட்டிலோபஸ் திரிஷூலா அல்லது சிலாவின் பிக்மி திரிஷூலா எனப்படும் புதிய வெட்டுக்கிளி இனத்துடன் சேர்த்து NBR பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 30 இனங்களையும் உள்ளடக்கியுள்ளது.
  • சிலாவின் பிக்மி திரிஷூலா 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் உள்ள இரவிகுளம் தேசியப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1964 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களின் மீதான சிவப்புப் பட்டியலானது உலகில் உயிரியல் இனங்களின் உலகப் பாதுகாப்பு நிலைக்கான மிகவும் விரிவான ஒரு பட்டியலாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்