TNPSC Thervupettagam

இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024

March 31 , 2024 109 days 320 0
  • 2024 ஆம் ஆண்டு இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை ஆனது சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் (IHD) ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப் பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில்லாத மக்கள் தொகையில் 83% பேர் இளைஞர்கள் ஆவர்.
  • மொத்த வேலைவாய்ப்பில்லாத மக்கள் எண்ணிக்கையில் 2000 ஆம் ஆண்டில் 54.2% ஆக இருந்த கல்வி கற்ற இளைஞர்களின் பங்கு ஆனது 2022 ஆம் ஆண்டில் 65.7% ஆக அதிகரித்துள்ளது.
  • மேலும், தற்போது கல்வி கற்ற ஆனால் வேலை வாய்ப்பு என்று எதுவும் இல்லாத இளைஞர்களில் ஆண்களை விட (62.2%) பெண்களின் (76.7%) பங்கு அதிகமாக உள்ளது.
  • 2000 ஆம் ஆண்டில், மொத்த வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்கள் எண்ணிக்கையில் பாதி பேர் சுயதொழில் செய்பவர்கள், 13% தினசரி வேலைகள் செய்பவர்கள், மீதமுள்ள 37% பேர் பகுதி நேர வேலை செய்பவர்கள் என்ற வகையில் இருந்தனர்.
  • ஏறக்குறைய 90% தொழிலாளர்கள் முறைசாரா பணிகளில் ஈடுபட்டுள்ளனர், அதே சமயம் 2000 ஆண்டிற்குப் பிறகு தொடர்ந்து அதிகரித்த தினசரி வேலைவாய்ப்புகளின் பங்கானது 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு சரிந்துள்ளது.
  • 75% இளைஞர்கள் ஆவண இணைப்புகளுடன் கூடிய மின்னஞ்சல்களை அனுப்ப இயலாதவர்களாகவும், 60% பேர் கோப்புகளை நகலெடுத்து இணைக்க இயலாமலும், 90% பேர் கணித சூத்திரத்தை விரிதாள் எனப்படும் அட்டவணை முறை கணித செயல் முறையில் (spreadsheet) சேர்க்க இயலாமலும் இருந்தனர்.
  • அடுத்தப் பத்தாண்டுகளில் இந்தியாவின் தொழிலாளர் வளத்தில் 7-8 மில்லியன் (70-80 லட்சம்) இளைஞர்கள் இணைவர்.

Maheswaran July 02, 2024

Printing works

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்