இந்திய ஹஜ் குழுவின் தலைவராக ஏ.பி.அப்துல்லா குட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் முதன்முறையாக இந்த குழுவின் துணைத் தலைவர்களாக இரு பெண்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
இவர்கள் முன்னாவாரி பேகம் மற்றும் மஃபுஜா காதுன் ஆகியோர் ஆவர்.
இந்தியாவில் ஹஜ் யாத்திரையை நடத்துவதற்கான ஒரு முதன்மையான அமைச்சகம் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகமாகும்.
இந்திய யாத்திரையாளர்களுக்கான ஹஜ் யாத்திரையானது இந்திய ஹஜ் குழு (HCoI) மூலமாகவோ அல்லது அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ் குழு அமைப்பாளர்கள் மூலமாகவோ (HGOs) மேற்கொள்ளப்படுகிறது.