இந்தியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் தினம் - டிசம்பர் 08
December 16 , 2024 6 days 45 0
1967 ஆம் ஆண்டு இதே நாளில் தான், முன்னதாக INS கல்வாரி எனப்படும் முதல் நீர் மூழ்கிக் கப்பல் படையில் இணைக்கப்பட்டது.
இந்தியப் பெருங்கடலில் வேட்டையாடும் புலிச்சுறா/வள்ளுவன் சுறாவின் மலையாளப் பெயர் கல்வாரி ஆகும்.
29 ஆண்டுகால சேவைக்குப் பிறகு 1996 ஆம் ஆண்டில் கல்வாரி கப்பல் பணியிலிருந்து நீக்கப்பட்டது.
INS கல்வாரி ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டது.
தற்போது, இந்தியா 18 வழக்கமான (டீசல்-மின்சார எஞ்சின்) நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குகிறது, இதில் ஐந்து ஸ்கார்பியன் ரகம் (பிரான்சு), நான்கு HDW ரகம் (ஜெர்மனி) மற்றும் ஏழு கிலோ ரகம் (ரஷ்யா) ஆகியவை அடங்கும்.