TNPSC Thervupettagam

இந்தியக் கடலோரக் காவல்படை தினம் – பிப்ரவரி 1

February 3 , 2019 2064 days 477 0
  • 2019 - ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதியன்று இந்தியக் கடலோரக் காவல்படை (The Indian Coast Guard  - ICG) தனது 42-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
  • 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதியன்று தற்காலிகமாக இந்தியக் கடலோரக் காவல்படையானது இந்திய உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இருக்கும் கடல்சார்ந்த கடத்தலைத் தடுக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது.
  • 1978-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 18 அன்று இந்தியப் பாராளுமன்றத்தால் இந்தியக் கடலோரக் காவல்படைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு உடனடியாக அது நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் அப்படையின் கடமைகளையும் செயல்களையும் தெளிவுபடுத்துகின்றது.
  • 42-வது கடலோரக் காவல்படை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னையில் பொதுமக்களின் மத்தியில் விளையாட்டு மற்றும் உடல்தகுதி ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வினைப் பரப்பும் நோக்கில் ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியான “அலையைக் கடக்கும் உடற்தகுதி சவால்” என்பது நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்