TNPSC Thervupettagam

இந்தியக் கடலோரக் காவல்படை தினம் - பிப்ரவரி 01

February 4 , 2024 295 days 379 0
  • இந்தியக் கடலோரக் காவல்படையானது 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் தேதியன்று நிறுவப் பட்டது.
  • பொருளாதாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கடல்வழி சரக்குப் பொருள் கடத்தல் நிகழ்வுகளை தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கடற்கரை அண்மைப் பகுதி பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடலோரப் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தை (EEZ) பாதுகாப்பது கடலோரக் காவல்படையின் பொறுப்புகளில் அடங்கும்.
  • 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று, இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) தினம் ஆனது பிப்ரவரி 01 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் என்று பாராளுமன்றம் அறிவித்தது.
  • ICG துறையானது உலகின் நான்காவது பெரிய கடலோரக் காவல்படையாக உள்ளது.
  • இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு கடற்சார் ஆயுதப் படை ஆகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்