TNPSC Thervupettagam

இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல் 'கமலா தேவி'

May 6 , 2022 842 days 428 0
  • சமூகச் சீர்திருத்தவாதியும் ஒரு சுதந்திரப் போராட்ட ஆர்வலருமான கமலாதேவி சட்டோபாத்யாயாவின் நினைவாக விரைவு ரோந்துக் கப்பலான இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பலுக்கு கமலா தேவி என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • ஐந்து விரைவு ரோந்து கப்பல் வரிசையில் நான்காவது கப்பலாக கமலா தேவி உருவாக்கப் பட்டுள்ளது.
  • ஆனால் 2021 ஆம் ஆண்டில், நான்காவது கப்பலானது SCG PS சோராஸ்டர் கப்பல் ஆக செஷல்ஸ் குடியரசிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதால் இது ஐந்தாவது கப்பலாகக் கணக்கிடப் பட்டது.

கமலாதேவி சட்டோபாத்யாய்

  • நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் மேம்பாட்டிற்காக இவர் பணியாற்றினார்.
  • இவர் இந்தியாவில் பெண்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பணி ஆற்றினார்.
  • இவருக்கு பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் ராமன் மகசேசே விருதுகள் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்