TNPSC Thervupettagam

இந்தியக் காடுகளின் நிலை குறித்த அறிக்கை 2023

December 24 , 2024 13 hrs 0 min 57 0
  • இந்திய வனக் கணக்கெடுப்பு அமைப்பினால் மேற்கொள்ளப்படும், இரண்டாண்டிற்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மதிப்பீடு ஆன 18வது இந்தியக் காடுகளின் நிலை குறித்த ஒரு அறிக்கையானது (ISFR) ஓராண்டிற்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.
  • சமீபத்திய அறிக்கையின்படி, 24.62 சதவீதத்தில் இருந்த இந்தியாவின் மொத்தக் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு ஆனது 2023 ஆம் ஆண்டில் 25.17 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
  • முதன்முறையாக வேளாண் காடு வளர்ப்பின் கீழ் வளர்க்கப்படும் மரங்களும் இதில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு ISFR அறிக்கையில் பதிவான காடுகளின் பரப்பளவு மற்றும் மரங்களின் பரப்பளவு 25.17 சதவீதமாக இருந்தது.
  • மொத்தக் காடுகளின் பரப்பளவு 7,15,342.61 சதுர கிலோமீட்டர் ஆகும் என்ற நிலையில்  இது நாட்டின் புவியியல் பரப்பளவில் 21.76 சதவீதமாகும்.
  • இந்த இரண்டையும் கணக்கில் கொண்டு கூறுகையில், மொத்தக் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு 8,27,356.95 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
  • நாட்டின் புவியியல் பரப்பில் 3.41 சதவீதம் மரங்கள் உள்ளன.
  • காடு மற்றும் மரங்களின் பரப்பில் அதிகபட்ச அதிகரிப்புப் பதிவாகியுள்ள முதல் நான்கு மாநிலங்கள் சத்தீஸ்கர் (684 ச. கிமீ), உத்தரப் பிரதேசம் (559 ச. கிமீ), ஒடிசா (559 ச. கிமீ) மற்றும் இராஜஸ்தான் (394 ச. கிமீ) ஆகியவையாகும்.
  • காடுகளின் பரப்பில் அதிகபட்ச அதிகரிப்பு பதிவாகியுள்ள முதல் மூன்று மாநிலங்கள் மிசோரம் (242 ச. கிமீ), குஜராத் (180 ச. கிமீ) மற்றும் ஒடிசா (152 ச. கிமீ) ஆகியவையாகும்.
  • பரப்பளவு வாரியாக மிகப்பெரிய காடு மற்றும் மரங்களின் பரவல் கொண்ட முதல் மூன்று மாநிலங்கள் மத்தியப் பிரதேசம் (85,724 ச. கிமீ), அருணாச்சலப் பிரதேசம் (67,083 ச. கிமீ) மற்றும் மகாராஷ்டிரா (65,383 ச. கிமீ) ஆகியவையாகும்.
  • மொத்தப் புவியியல் பரப்பளவில் காடுகளின் பரவல் சதவீதத்தின் அடிப்படையில், லட்சத்தீவு (91.33 சதவீதம்) அதிகப் பரவலைக் கொண்டுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து மிசோரம் (85.34 சதவீதம்) மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவு (81.62 சதவீதம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • இந்தியாவின் மொத்த சதுப்புநிலப் பரப்பு 4,992 சதுர கிலோ மீட்டர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்