TNPSC Thervupettagam

இந்தியக் காட்டு கழுதை - குர்

October 7 , 2024 11 hrs 0 min 64 0
  • லிட்டில் ரான் ஆஃப் கட்ச் என்ற பகுதியில், உள்ளூரில் குர் என்று அழைக்கப்படுகின்ற இந்தியக் காட்டு கழுதைகளின் (ஈக்வஸ் ஹெமியோனஸ் குர்) எஞ்சியிருக்கும் ஒரே வாழ்விடமான காட்டுக் கழுதை சரணாலயம் உள்ளது.
  • இந்தப் பகுதியில் சுமார் 6,000 மணல் மற்றும் பழுப்பு நிறக் கழுதைகள் வாழ்கின்றன.
  • 1850 ஆம் ஆண்டுகளில் இந்தப் பகுதியில் கடைசியாகக் காணப்பட்ட சிவிங்கிப் புலி மற்றும் சிங்கம் போன்ற வேட்டையாடும் விலங்குகளையும்  தாண்டி இது வாழ்கிறது.
  • பல நோய்களின் காரணமாக குர் இனமானது சமீபத்தில் அழிந்து வரும் நிலையினை எட்டும் சூழலை அடைந்துள்ளது.
  • வைரஸ் ஆப்பிரிக்கக் குதிரை நோய் மற்றும் சுர்ரா (புரோட்டோசோவா ஒட்டு உண்ணியான டிரிபனோசோமா எவன்சியால் ஏற்பட்டு பூச்சிகள் கடிப்பதால் அதிகம் பரவுகிறது) ஆகிய நோய்கள் அதிக எண்ணிக்கையிலான கழுதைகளை அழித்தது.
  • 1960 ஆம் ஆண்டுகளில் சில நூறு கழுதைகள் மட்டுமே இந்த நோயில் இருந்து உயிர் பிழைத்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்