எட்டாவது இந்தியக் கைபேசி மாநாடு ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு, ‘The Future is Now’ என்பதாகும்.
இதில் 120 நாடுகள் பங்கேற்றன.
இந்த நிகழ்வின் போது சர்வதேசத் தொலைத் தொடர்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப் பட்ட 2024 ஆம் ஆண்டு உலகத் தொலைத் தொடர்பு தர நிர்ணயச் சபையின் (WTSA) தொடக்க விழாவிற்கான எண்ணிம கல்வெட்டு வெளியிடப்பட்டது.
இந்தியாவில் கைபேசி தரவானது (டேட்டா) ஒரு ஜிகாபைட்டுக்கு 12 சென்ட்கள் ஆகும்.
மற்ற நாடுகளில், ஒரு ஜிகா பைட் டேட்டா பத்து மடங்கு விலை அதிகமாகும்.
இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 30 ஜிகா பைட் டேட்டாவைப் பயன்படுத்துகின்றனர்.
தற்போது, இந்தியாவில் 200 திறன் பேசி உற்பத்தி அலகுகள் உள்ளன.
உலகத் தொலைத் தொடர்பு தர நிர்ணயச் சபையும் இந்த நிகழ்ச்சியுடன் தொடங்கப் பட்டது.