TNPSC Thervupettagam

இந்தியச் சுரங்கப் பணியகத்தின் மறுசீரமைப்பு

May 9 , 2018 2266 days 1468 0
  • சுரங்கத் துறையின் ஒழுங்குமுறைகளை (mineral sector regulation) சீர்திருத்துவதற்காக இந்தியச் சுரங்கப் பணியகத்தை (Indian Bureau of Mines) மறுகட்டமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளளது.
  • 2008-ஆம் ஆண்டு மத்திய சுரங்க அமைச்சகமானது (Ministry of Mines) தேசிய கனிம கொள்கையின் (National Mineral Policy) கூறுகளினுடைய வழிகாட்டுதல் வெளிச்சத்தின் படி, விரிவான இந்திய சுரங்கப் பணியகத்தின் செயற்பாத்திரம் மற்றும் செயல்பாடுகளுக்கான மறுகட்டமைப்பு மற்றும் மதிப்பீட்டிற்காக (panel for comprehensive 'Review and Restructuring of the Functions and Role of IBM) ஓர் குழுவை அமைத்தது.
  • இந்த மறுகட்டமைப்பானது சுங்கத்துறை மற்றும் மேம்பாட்டு விவகாரங்களில் செயல்திறனை மேம்படுத்த பணியகத்தால் தகவல் தொடர்பு மற்றும் விண்வெளித் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு இயலச் செய்திடும்.
  • இணைச் செயலாளர் (Joint Secretary) அளவிலான பதவி மற்றும் அதற்கும் மேலான பதவி போன்ற சில பதவிகளை உருவாக்குதல், அழித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவற்றின் மூலம் இந்திய சுரங்கப் பணியகம் மறுகட்டமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த மறுகட்டமைப்பானது சுரங்கங்களின் முதன்மைக் கட்டுப்பாட்டாளர் (Chief Controller of Mines) எனும் புதிய பதவியையும், சுரங்கக் கட்டுப்பாட்டாளர் (Controller of Mines) எனும் பதவியையும் உருவாக்குவதை உள்ளடக்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்