TNPSC Thervupettagam
September 16 , 2022 676 days 449 0
  • K.K.வேணுகோபால் பதவி விலகியதை அடுத்து, இந்தியாவின் 14வது தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி நியமிக்கப்பட உள்ளார்.
  • தலைமை வழக்கறிஞராகப் பதவி ஆற்ற உள்ள ரோஹத்கிக்கு  இது இரண்டாவது முறையாகும்.
  • அவரது முதல் பதவிக் காலம் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஆகும்.
  • இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் பதவியானது மத்திய நிர்வாகத்தின் ஒரு அங்கமாக உள்ளது.
  • தலைமை வழக்கறிஞர் நாட்டின் மிக உயரியச் சட்ட அதிகாரி ஆவார்.
  • அரசியலமைப்பின் 76வது பிரிவானது இந்தியத் தலைமை வழக்கறிஞர் பதவியினை வழங்குகிறது.
  • இந்தியாவின் சொலிசிட்டர் வழக்கறிஞர் மற்றும் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் வழக்கறிஞர் ஆகியோர் அதிகாரப்பூர்வ பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தலைமை வழக்கறிஞருக்கு உதவுகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்