TNPSC Thervupettagam

இந்தியத் திபெத்திய எல்லைக் காவல் படை எழுச்சி தினம் - அக்டோபர் 24

October 28 , 2022 667 days 237 0
  • இந்தியா-சீனா போரின் போது, 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று இந்திய திபெத்திய எல்லை காவல் படை நிறுவப்பட்டது.
  • உயரமான பகுதியில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற வகையில் இது ஒரு எல்லைக் காவல் படையாகும்.
  • தற்போது, ​​லடாக்கின் காரகோரம் கணவாய் முதல் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜசெப் லா வரையிலான 3488 கிமீ நீள இந்திய-சீனா எல்லையை உள்ளடக்கிய எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை நிலை நிறுத்தப் பட்டுள்ளது.
  • இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையானது, ஆரம்பத்தில் 1949 ஆம் ஆண்டு மத்திய சேமக் காவல் படை (CRPF) சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • இருப்பினும், 1992 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் மத்திய சேமக் காவல் படை சட்டத்தை இயற்றியதோடு, அதற்கான விதிகளை 1994 ஆம் ஆண்டில் உருவாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்