2024 ஆம் ஆண்டு இந்தியத் திறன்கள் அறிக்கையில் அதிக வேலை வாய்ப்பு வளங்களைக் கொண்டிருக்கும் பிரிவில் ஆந்திரப் பிரதேச மாநிலமானது மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா இதில் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த இளைஞர்களின் வேலைவாய்ப்பின் முன்னேற்ற நிலையானது, 51.25% என்ற அளவினை எட்டியுள்ளது.
ஹரியானா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்கள், அதிக வேலை வாய்ப்பு பெறக் கூடிய இளைஞர்களின் செறிவைக் காட்டுகின்றன.
ஹரியானாவில் அதிக வேலை வாய்ப்பு பெறக் கூடிய இளைஞர்கள் குவிந்துள்ளனர்.
80.82% அளவு வேலைவாய்ப்பு பெறக்கூடிய இளைஞர்களுடன் புனே முதலிடத்தைப் பிடித்ததோடு, அதைத் தொடர்ந்து பெங்களூரும், திருவனந்தபுரமும் உள்ளன.
18-21 வயதிற்குட்பட்டவர்களில் 85.45% பேர் அளவு வேலை வேலைவாய்ப்பு பெறக் கூடிய திறன்களைப் பெற்றவர்களை தெலுங்கானா மாநிலம் கொண்டுள்ளது.
26-29 வயதிற்குட்பட்ட நபர்களில் அதிக வேலைவாய்ப்பு பெறக் கூடிய அளவு மனித வளங்களை குஜராத் மாநிலம் கொண்டுள்ளதோடு, இந்த வயதினரில் 78.24% பேர் வேலை வாய்ப்பு பெரும் திறனுடன் உள்ளனர்.