TNPSC Thervupettagam

இந்தியத் திறன்கள் அறிக்கை 2025

December 16 , 2024 11 days 58 0
  • 2025 ஆம் ஆண்டில், இந்தியப் பட்டதாரிகளில் சுமார் 55 சதவீதம் பேர் உலகளவில் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிற நிலையில் இது 2024 ஆம் ஆண்டில் 51.2 சதவீதமாக இருந்தது.
  • மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் வேலைவாய்ப்பிற்குரிய திறமையாளர்கள் நிறைந்த முக்கிய மையங்களாக உருவாகி வருகின்றன.
  • புனே, பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்கள் திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளன.
  • 2024 ஆம் ஆண்டில் 51.8 சதவீதமாக இருந்த ஆண்களுக்கான வேலைவாய்ப்பு விகிதம் ஆனது, 2025 ஆம் ஆண்டில் 53.5 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதற்கிடையில், 50.9 சதவீதமாக இருந்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு விகிதம்  ஆனது 47.5 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பில் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து டெல்லி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் மாநிலங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்