TNPSC Thervupettagam

இந்தியத் துணைக்கண்டப் பிரிவினை பற்றிய இந்தியாவின் முதல் அருங்காட்சியகம்

August 25 , 2017 2647 days 974 0
  • எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் உள்ள டவுன்ஹால் கட்டடத்தில் இந்தியத் துணைக்கண்டப் பிரிவினை பற்றிய இந்தியாவின் முதல் அருங்காட்சியகம் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
  • பிரிவினையின்போது பாதிப்பிலிருந்து மீண்டவர்களது கதைகளையும் நினைவலைகளையும் வெளியுலகுக்கு பறைசாற்றக்கூடிய ஒன்றாய் இது அமைக்கப்பட இருக்கிறது.
  • இந்த அருங்காட்சியகத்தின் மூலமாக, எவ்வாறு காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டம் மிகவும் கொடூரமான வன்முறைப் பாதையினை தழுவியது என்ற கதையினை அறிந்து கொள்ள இயலும்.
  • பிரிவினையின் போது வெளிவந்த செய்தித்தாள்களின் செய்திக் கட்டுரைகள் இங்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது.
  • இந்தியப் பிரிவினை (Partition of India)
  • இது 1947 ல் பிரிட்டிஷ் இந்தியாவை இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் பிரிக்கப்பட்டதைக் குறிக்கிறது.
  • இந்தியத் துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஆட்சி முடிவுற்றதன் ஒரு பகுதியாக இந்தப் பிரிவினை கருதப்படுகிறது.
  • சர் சையது அகமதுகான் முன்வைத்த இருதேசக் கொள்கையே (Two Nation Theory) இந்தியப் பிரிவினையின் முக்கியக் காரணமாகும்.
  • இந்தப் பிரிவினையின் முதன்மை பரப்பாளராகச் செயல்பட்டவர் ஜின்னர் ஆவார். பின்னர் பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் பதவி வகித்தார்.
  • இந்தப் பிரிவினையின் போது இரு நாடுகளுக்கிடையேயும் புதிதாக உருவாக்கப்பட்ட ராட்கிளிஃப் எல்லைக்கோட்டினை பல லட்சக்கணக்கான மக்கள் கடந்து இரு நாடுகளுக்கும் இடையே சென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்