இந்திய மக்களவையானது '2024 ஆம் ஆண்டு கடல் வழி சரக்குப் போக்குவரத்து’ என்ற மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது, நாட்டின் கடல்சார் துறையில் சட்டபூர்வக் கட்டமைப்பை நவீன மயமாக்கவும் புதுப்பிக்கவும் முயல்வதோடு, வணிகம் செய்வதை மிக எளிதாக்கவும் முயல்கிறது.
இந்த மசோதாவானது காலனித்துவக் காலச் சட்டமான 1925 ஆம் ஆண்டு கடல் வழி சரக்குப் போக்குவரத்துச் சட்டத்திற்கு மாற்றாக அமைகிறது.
இந்த மசோதா துறைமுகங்களில் மாசு கட்டுப்பாடு, பேரிடர் மேலாண்மை, அவசரகால நடவடிக்கை, பாதுகாப்பு, வழிசெலுத்தல் மற்றும் தரவு மேலாண்மை போன்ற பல்வேறு முக்கியமான அம்சங்களைக் கையாள்கிறது.
இது சர்வதேசக் கடமைகள் மற்றும் கடல்சார் உடன்படிக்கைகளுடனான இந்தியாவின் இணக்கத்தினை உறுதி செய்வதற்கும் முயல்கிறது.