TNPSC Thervupettagam

இந்தியத் தேசிய ஆவணக் காப்பகத்தின் 135வது ஸ்தாபன தினம்

March 16 , 2025 15 days 71 0
  • இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் (NAI) ஆனது, மார்ச் 11 ஆம் தேதியன்று அதன் 135வது ஸ்தாபன தினத்தினை "Indian Heritage through Architecture" என்ற கருத்துருவிலான ஒரு கண்காட்சியுடன் கொண்டாடியது.
  • கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்ட அலுவலகமான NAI ஆனது, முதலில் 1891 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதியன்று கொல்கத்தாவில் (கல்கத்தா) பிரிட்டிஷ் ஆவணக் காப்பு (பதிவுத் துறையாக) துறையாக நிறுவப்பட்டது.
  • ஆவணங்களை கொல்கத்தாவிலிருந்து புது டெல்லிக்கு மாற்றும் செயல்பாடு 1937 ஆம் ஆண்டில் முழுமையாக முடிவடைந்தது.
  • இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் ஆனது, பொதுப் பதிவுச் சட்டம், 1993 மற்றும் பொதுப் பதிவு விதிகள், 1997 ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான ஒரு தலைமை நிறுவனமாகவும் செயல்படுகிறது.
  • இந்த நிகழ்வின் போது, ​​இந்தியாவின் பரந்த கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தினை ஆய்வு செய்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக 'ஞான பாரதம் திட்டம்' தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்