TNPSC Thervupettagam

இந்தியத் தொழில் கூட்டமைப்பு - National Energy Leader விருது

September 12 , 2021 1044 days 501 0
  • ஜிஎம்ஆர் தலைமையிலான டெல்லி சர்வதேச விமான நிலையமானது  இந்தியத் தொழில் கூட்டமைப்பின் 'தேசிய ஆற்றல் தலைவர்' (National Energy Leader) மற்றும் 'சிறந்த ஆற்றல் திறன் அலகு' ஆகிய மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது.
  • ஜிஎம்ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையமும்  இந்தியத் தொழில் கூட்டமைப்பின் 'தேசிய ஆற்றல் தலைவர்' மற்றும் 'சிறந்த ஆற்றல் திறன் அலகு' விருதுகளை வென்றுள்ளது.
  • இது 22வது தேசிய விருது வழங்கும் விழாவில் ஆற்றல் மேலாண்மையில் சிறந்து விளங்குவதால் வழங்கப்பட்டது.
  • இது இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு - பசுமை வணிக மையத்தினால் 22வது ‘ஆற்றல் திறன் உச்சி மாநாட்டின்’ போது ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த விருதுகளின் குறிக்கோள், அன்றாடச் செயல்பாடுகளில் சிறந்த நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்ளும் ஆற்றல்-திறன் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை அங்கீகரிப்பதாகும்.
  • வானூர்தி நிலையங்களுக்கான பன்னாட்டுக் குழுவின் விமான நிலையக் கரிம அங்கீகாரத் திட்டத்தின் கீழ் ஆசிய பசிபிக்கின் முதல் நிலை 4+ (மாற்று நிலை) அங்கீகாரம் பெற்ற விமான நிலையம் டெல்லி சர்வதேச விமான நிலையமாகும்.
  • கரிமச் சமநிலை கொண்ட ஒரு விமான நிலையமான ஐதராபாத் சர்வதேச விமான நிலையமானது கார்பன்  நிலை 3 + "சமநிலை" அங்கீகாரத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்