இந்தத் தேதியானது 1780 ஆம் ஆண்டில் ஹிக்கிஸ் பெங்கால் கஸெட் எனப்படுகின்ற இந்தியாவின் முதல் செய்தித்தாள் வெளியிடப்பட்டதை நினைவு கூர்கிறது.
ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி, "இந்தியப் பத்திரிகையின் தந்தை" என்று கருதப்படுகிறார்.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Role of Print Media in the Digital Age" என்பதாகும்.
இந்தியாவில் தற்போதுள்ள மிகப் பழமையான செய்தித்தாள் ஆன மும்பை சமாச்சார் (முன்னதாக பம்பாய் சமாச்சார் எனப்பட்டது), 1822 ஆம் ஆண்டில் முதன்முறையாக குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்டது.
இந்தியாவின் முதல் தமிழ் செய்தித்தாள் சுதேச மித்ரன் ஆகும் என்பதோடு இது 1882 ஆம் ஆண்டில் G. சுப்பிரமணிய ஐயர் அவர்களால் வார இதழாகத் தொடங்கப்பட்டது.