TNPSC Thervupettagam

இந்தியப் பத்திரிக்கைச் சபையின் தலைவர்

June 20 , 2022 764 days 354 0
  • ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் இந்தியப் பத்திரிக்கை சபையின் முதல் பெண் தலைவர் ஆனார்.
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் சட்டமன்றத் தொகுதிகளை மறு வரையறை செய்வதற்காக சமீபத்தில் அமைக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான எல்லை நிர்ணய ஆணையத்திற்கு இவர் தலைமை தாங்கினார்.

இந்தியப் பத்திரிக்கைச் சபை

  • 1978 ஆம் ஆண்டு இந்தியப் பத்திரிக்கைச் சபைச் சட்டத்தின் கீழ் இந்தியப் பத்திரிக்கைச் சபையானது நிறுவப்பட்டது.
  • இது ஒரு தலைவர் மற்றும் 28 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • இந்தியப் பத்திரிக்கைச் சபையானது அச்சு ஊடகத்தின் செயல்பாட்டை மட்டுமே கண்காணிக்கிறது.
  • வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகம் போன்ற மின்னணு ஊடகங்களின் செயல்பாட்டை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் இதற்கு இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்